கனேடிய முதியோர்களுக்கான் தடுப்பூசிகளுக்கான வழிகாட்டி
நவம்பர் 13, 2023 (ஜனவரி 29, 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது)
Arushan Arulnamby, Samir K. Sinha
புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளின் இருப்புநிலை குறித்து பதிலளிக்கும் வகையில், National Institute on Ageing (NIA) அதன் சிற்றேட்டின் புதிப்பிக்கப்பட்ட பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கனேடிய முதியோர்களுக்கான் தடுப்பூசிகளுக்கான வழிகாட்டி. இந்தத் தனித்துவமான வளம் குறிப்பாக இந்த குளிர் மற்றும் சளிக்காய்ச்சல் பருவத்திலும் அதற்குப் பிறகும் வரும் என்று கணிக்கப்பட்ட ‘டிரிபிள்டெமிக்’ குறித்து மூத்த கனேடியர்களைத் தெரிவிக்கவும் அவர்களைத் தயார்படுத்தவும்.எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் செய்முறைசார்ந்த தகவலை 18 மொழிகளில் வழங்குகிறது.
சளிக்காய்ச்சல் மற்றும் RSV பருவம் பொதுவாக நவம்பர் மாதத்தில் தொடங்கி மே மாதத்தில் முடிவுக்கு வரும். பெரும்பாலான சளிக்காய்ச்சல் மற்றும் RSV பாதிப்பு மிதமாக இருந்தாலும், அவை அதிகக் கடுமையாக மாறலாம். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்கள் அதிக ஆபத்துக்குட்பவும் வாய்ப்புள்ளது: அவர்கள் கனடா மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கிறார்கள், ஆனால் கனடாவில் சளிக்காய்ச்சல், RSV, COVID 19 மற்றும் கபவாதசுரம் ஆகிய பாதிப்பினால் ஏற்படும் இறப்பில் சுமார் 90 சதவீதத்தை அவர்கள் பிரதிபலிக்கின்றனர்.